Wednesday 17 August 2011

வீரத்தமிழன் அப்துல் ரவூப்


ஓவியம் தேவைப்படுவோர் படத்தை அழுத்தி பெரிதாக்கி தரவிரக்கம் செய்யலாம்
பச்சைமுத்து வரைந்த வீரத்தமிழன் அப்துல் ரவூப்

ஓவியர் பச்சைமுத்து


அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், இரும்புலிக்குறிச்சி கிராமத்தைச் சார்ந்த தில்லைக்கண்ணு – பாப்பா தம்பதிகளுக்கு பிறந்த ஓவியர் தி. பச்சைமுத்து ஆகிய நான் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்ந்த குடும்பத்தில் பிறந்தாலும், வறுமையாக வாழ என் மனம் இடம் கொடுக்கவில்லை, காரணம் என் தாய் – தந்தைக்கு ஒரே மகனாக பிறந்தது.

பள்ளியில் படிக்கும்போதே ஓவியத்தின் மீது ஈடுபாடு உள்ளது. எனது அப்பாவுக்கு இசை, நடனம், தெருக்கூத்து போன்றவற்றில் பயிற்சி பெற்றவர். அதன் அடிப்படையில் எனது கலை ஆர்வம் ஆரம்பம்மானது. தொடர்ந்து வரைய ஆரம்பித்தேன்.

வரைந்த இலக்கு கும்பகோணம் அரசு கவின் (ஓவியம்) கலைக்கல்லூரியில் சேர்ந்து பயிலுவதற்கு வாய்ப்பு கிடைத்து முதுகலை வரை படித்து பட்டம் பெற்றேன். லலித் கலா அகடாமியின் மாநில விருது, (சகுணம்) என்ற ஓவியத்திற்கு, நாக்பூரில் தேசிய அளவிலான ஓவியக்கண்காட்சியில் இடம் பெற்று உதவி தொகை பெற்றேன்.

ஓவியர் சந்ருவின் ஈர்ப்பில் என் கோடுகளை வரைய ஆரம்பித்தேன். அன்மையில் நடந்து முடிந்த உலகத் தமிழர் செம்மொழி மாநாட்டிற்கான (செம்மொழி சிற்பிகள்) என்ற மலருக்கு 100 தமிழ் அறிஞர்களை கோட்டோவியமாக வரைந்தேன். தமிழரின் பாரம்பரியத்தை பற்றியான தமிழில் (ஓவிய நடைமொழியில்) ஆய்வு செய்து வருகிறேன். தமிழ் திரைப்படத்திற்கு தமிழர் பாரம்பரியத்திற்கான கதை ஓவியங்களோடு எழுதி வருகிறேன், விரைவில் திரையில் பார்க்கலாம்.